மதுரை மாநகராட்சி தெருக்களில் குளம்போல தேங்கும் மழைநீர்..! நோய்பரவும் அபாயம்..!

மதுரை மாநகராட்சி தெருக்களில் குளம்போல தேங்கும் மழைநீர்..! நோய்பரவும் அபாயம்..!
X

மதுரை அண்ணாநகர் தாசில்தார்நகர் வீரவாஞ்சி தெருவின்  அவல நிலை.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், தாசில்தார் நகர் தெருக்களில் பள்ளங்கள் மூடப்படாததால் குளம்போல தேங்கும் மழைநீரால் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுளளது.

மதுரை மேலமடை பகுதியில் தெருக்களில் பல்வேறு பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டுகின்றனர். ஆனால் அந்த பள்ளங்களை சரியாக மூடாமல் விட்டுவிடுவதால் மழைக்காலங்களில் அந்த மூடப்படாத பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்துகின்றது.

பள்ளங்கள் தூண்டிவிட்டு சரியாக மூடாத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் பகுதிகளில், தொடர்ந்து தெருக்களில் மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகளுக்காக பெரிய பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. இந்த பள்ளங்களை வேலை செய்யும் ஒப்பந்ததாரர் முறையாக மூடி மண்ணை சமப்படுத்தவேண்டும். ஆனால், ஏதோ கடமைக்கு மண்ணை தள்ளிவிட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.


இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும்போது தொடர்ந்து அவதியடையும் நிலை ஏற்படுகிறது. மதுரை மாநகராட்சி சார்பில் ,பாதாள சாக்கடை பணிக்காக அவ்வப்போது சாலைகளில் மூலம் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது.

அவ்வாறு தோண்டப்படும் போது, சாலையின் குறுக்கே உள்ள குழாய்கள் உடைக்கப்பட்டு, கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து நிற்கிறது. அத்துடன் தோண்டப்பட்ட பள்ளங்களை ஒப்பந்ததாரர்கள் சரிவர மூடப்படாமல் விடுவதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி விழுந்து காயங்கள் ஏற்படுகின்றன.

இது குறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர் கூறும்போது, மதுரை மாநகராட்சி சார்பில் ஒரு தெருவில் பள்ளம் தோண்டும் போது, அதை சரி செய்து விட்டு, அடுத்த தெருவில் பள்ளங்கள் தோண்டினால், பொதுமக்கள் தெருக்களில் சென்று வர ஏதுவாக இருக்கும்.

ஆனால் ,ஒரே நேரத்தில் அனைத்து தெருக்களிலும் பள்ளங்கள் தோண்டப்படுவதால், குடியிருப்பு வாசிகள் சாலையில் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது. இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் கவனத்திற்கு கொண்டு சென்றும் கூட சாலையில் தோண்டப்படும் பள்ளங்களை சரிவர மூட ஒப்பந்ததார்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

மேலும் ,மதுரை அண்ணா நகர் வீரவாஞ்சி தெரு, ராஜராஜன் தெரு காதர் மொய்தீன் தெரு, அன்பு மலர் தெரு உள்ளிட்ட தெருக்களில் சாலைகள் சரியாக மூடப்படாததால், அவ்வழியாக செல்வோர் கால் தவறி கீழே விழுகின்ற நிலை ஏற்படுகிறது.

இது குறித்து ,மதுரை மாநகராட்சி பொறியாளர்கள் உரிய கவனம் எடுத்து சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது. வீரவாஞ்சி தெருவில், சாலைகள் சரியாக மூடப்படாதால் இரவு நேரத்தில் 2 பேர் தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாலைகளில் சாக்கடை நீரும் மழைநீரும் ஒரே நேரத்தில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் டெங்கு பரவி வருகிறது. அதனால் மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து தெருக்களில் மழைநீர் தேங்காதவாறும், சாக்கடை கல்விநீர் உடைப்புகளி சரி செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுளளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!