எதிர் கட்சிகள் மாநாடு,ஆண்டிகள் கட்டிய மடம்: ஓபிஎஸ் வர்ணனை
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
எதிர்கட்சிகள் மாநாடு என்பது ஆண்டுகள் கூடி மடம் கட்டியது போல் தான் என்றார் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்
அதிமுக வழக்கின்தீர்ப்பு ஒத்திவைப்பு குறித்த கேள்விக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால்,அது பற்றி எதுவும் கூற முடியாது. திரைப்படங்களில் ஜாதியை குறித்து விமர்சனம் பற்றிய கேள்விக்கு ,அந்த திரைப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன் என, கூறினார்.
பாஜக அண்ணாமலை செய்தியாளர்களிடம் கடுமையாக பேசியுள்ளார் .இது குறித்த கேள்விக்கு,நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதில் அவர்களுக்கு (பத்திரிக்கையாளர்களுக்கு)உரிமை உள்ளது ஜனநாயக கடமை உள்ளது. பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டம் குறித்த கேள்விக்கு கடந்த காலங்களில் இது போல் எதிர்கட்சிகள் பல்வேறு மாநாடு நடத்தியுள்ளனர்.ஆண்டிகள் கூடிநடத்தியது போல் தான் இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu