மதுரை நகரில் மோசமாகி வரும் சாலைகள்: கண்டு கொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

மதுரை நகரில் மோசமாகி வரும் சாலைகள்: கண்டு கொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்
X

மதுரை அண்ணா நகர் மருதுபாண்டி தெருவின் அவல நிலை.

மழை காலத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு சாலைகளை சீர்படுத்த வேண்டும் என்று மதுரை மாநகராட்சியை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மதுரை.

மதுரை மேலமடை கோமதிபுரம் செல்லும் மருதுபாண்டி சாலையானது, பல நாட்களாக தோண்டப்பட்டு இன்னும் அது மூடப்படாததால், கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. அதனால் சாலை சேரும் சகதியுமாக காணப்படுகிறது. முதலில் பாதாள சாக்கடை பணிக்காகவும், அதன் பிறகு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக்கவும் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் நீர் குளம் போல தேங்கி நிற்கிறது. அத்துடன், கழிவுநீர் செல்லும் பாதையில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீரும் மழைநீருடன் சேர்ந்து சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

இதேபோல மதுரை அண்ணா நகர் கோமதிபுரம் செல்லும் சாலையில், மருதுபாண்டி தெருவில், ஆங்காங்கே பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீரானது, மழைநீருடன் கலக்கிறது.

இதனால், அப்பதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், மதுரை தாசில்தார் நகர் வீரவாஞ்சி தெரு, அன்பு மலர் தெரு, காதர் மொய்தீன் தெரு , ஜூப்ளி டவுன் திருக்குறள் வீதி ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் இடறி கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும், மதுரை வண்டியூர், யாகப்ப நகர் பகுதியிலும் சாக்கடை நீர் சாலைகளை பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மதுரை மாநகராட்சி நிர்வாகமானது, நோய் ஏற்படாத வகையில் துரித நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தோண்டப்பட்ட சாலைகளை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பொதுவாகவே மழைக்காலங்களில் நோய்பரவும் அபாயம் அதிகம் உள்ளது. மழைக்காலங்களில் தேங்கும் நீரில் இருந்து தான் கொசுக்கள் பெருகும். இதனால்தான் வீடுகளுக்கு முன்பாக அல்லது வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு இருக்கவேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்திக் கூறுவார்கள். தமிழகத்தில் டெங்கு பரவி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், மதுரை மாநகராட்சி உடனடியாக கழிவுநீர் கலக்கும் இடங்களில் கழிவுநீர் கால்வாய்களை சரி செய்யவேண்டும். மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு குண்டும் குழியுமாக கிடைக்கும் சாலையையும் சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story