மதுரையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்றவரிடம் விசாரணை

மதுரையிலிருந்து  இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்றவரிடம் விசாரணை
X

மதுரையிலிருந்து இலங்கைக்கு அடுப்பில் மறைத்து வைத்து கடத்தப்பட இருந்த போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

பழைய மண்ணெண்ணெய் அடுப்பில், மண்ணெண்ணெய் இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது

மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரையிலிருந்து இலங்கைக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கடத்த உள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் பேரில், மதுரை விமான நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில், இலங்கைப் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஜவஹர் மகன் ஷகில் அஹமது (28). என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, பையில் வைத்திருந்த, பழைய மண்ணெண்ணெய் அடுப்பில், மண்ணெண்ணெய் இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

அவரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.அப்போது , அந்த இளைஞர் அந்தப்பொருள் தன்னுடையது இல்லை என்றும், விமான நிலையம் வந்தபோது அறிமுகம் இல்லாத நபர் அதை இலங்கையில் சேர்த்து விடும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் எடுத்து வந்ததாகவும்,கூறினார். ஷகில் அகமதுவிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story