பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்கள்பணி நீக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்கள்பணி நீக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் உள்ள பேராசிரியர் 8 பேரை நீக்கியதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்

கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்ட 8 பேரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது

திருப்பரங்குன்றம் அருகே உள்ள அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் உள்ள பேராசிரியர்கள் 8 பேரை பணிம நீக்கம் செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் அரசு உதவிபெறும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் உள்ள சுயநிதி பிரிவில் பணிபுரியும் 8 பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதைக் கண்டித்தும் மீண்டும் பணிவழங்க வலியுறுத்தியும் மூட்டா மற்றும் டான்செக் அமைப்பை சேர்ந்த போராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 44 பேர் கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, தற்போது, எவ்வித முன்னறிவிப்புமின்றி 8 பேரை பணி நீக்கம் செய்து. அவர்களுக்கு மூன்று மாத ஊதியத்தை மட்டுமே ம் நிவாரணமாக கல்லூரி நிர்வாகம் அளித்ததைக் கண்டித்து, மூட்டா மற்றும் டான்செக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்யப்பட்ட 8 பேரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டுகளில் பணியிலிருந்து நீக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !