மதுரை மாநகராட்சி பூங்காவில் குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும் சறுக்கும் மரம்..!
மாநகராட்சி பூங்காவில் உள்ள சேதமடைந்த சறுக்கு மரம்.
குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும் இரும்பு சறுக்கு மரம்.
மதுரை:
மதுரையில் சிறுவர்களுக்கான பூங்காக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. இதில், காந்தி மியூசியம் மதுரை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள ராஜாஜி பூங்காவில் குழந்தைகள் ஆவலுடன் விளையாடும் சறுக்கு விளையாட்டில் உள்ள தகரம் உடைந்து இருக்கிறது.
மேலும், குழந்தைகள் தெரியாமல் அதில் ஏறி விளையாடும் பொழுது தகரம் உடைந்து தூக்கிய நிலையில் உள்ளதால், குழந்தைகளுக்கு காயம் ஏற்படுகிறது. மாநகராட்சி பூங்கா ஊழியர்களிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பூங்காவுக்கு வருவோர் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
பணம் மட்டும் கறாராக வசூலிக்கும் மாநகராட்சி நிர்வாகம் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பாகங்களை உடனடியாக சரி செய்து குழந்தைகளுக்கு எந்த காயங்களும் ஏற்படாமல் விளையாடுவதற்காக வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர். மேலும் ராஜாஜி பார்க் பொழுதுபோக்கை ஒன்றை மட்டும் நம்பி உள்ள மதுரை மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்காலத்தில் குழந்தைகள் செல்போனை வைத்துக்கொண்டு வீட்டில் விளையாடி மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். விளையாட்டு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து செல்போனை பார்ப்பதால், கண்பார்வை, உடல் ஆரோக்ய குறைபாடு போன்றவை ஏற்படுகிறது. குழந்தைகள் வெளியில் வந்து விளையாடுவதற்கு ஒரே இடம் பொது பூங்காக்கள் மட்டுமே. அந்த பூங்காக்களை முறையாக பராமரிக்காமல் இருந்தால் குழந்தைகள் எப்படி விளையாட முடியும்.
குழந்தைகளின் ஆரோக்யம் கருதி குழந்தைகள் பூங்காவில் பழுதடைந்துள்ள அனைத்து விளையாட்டு பொருட்களையும் மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் என்று பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu