புகார் பெட்டி வைத்து நூதன முறையில் சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

புகார் பெட்டி வைத்து நூதன முறையில் சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

சோழவந்தானில் புகார் பெட்டி வைத்து வாக்கு சேகரித்தார் சுயேச்சை வேட்பாளர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் புகார் பெட்டி வைத்து சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர்ப்புற தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகின்றன. அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சோழவந்தான் பேரூராட்சி 7வது வார்டு சுயேச்சை வேட்பாளர் செல்லப்பா சரவணன் பொதுமக்களிடம் புகார் பெட்டி வைத்து புகார் மனுக்களை பெற்று நூதன முறையில் வாக்குகள் சேகரித்தார். தண்ணீர் குழாய் சின்னத்திற்கு அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி வாக்குகள் சேகரித்தனர்.

முதலியார் கோட்டை மேலத்தெரு, முதலியார் கோட்டை கீழத்தெரு, வெங்கடாஜலபதி நகர் ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார் அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!