மதுரையில், இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா!
மதுரையில் ,இலவச கண்ணாடி வழங்கும் விழா.
மதுரையில் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா :
மதுரை:
மதுரை குட்செட் தெருவில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா சிறப்பு கண் மருத்துவமனையில், இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா நடந்தது.
ஜூன்.22 ம் தேதி, மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா சிறப்பு மருத்துவமனை, நல்லோர் குழு மற்றும் மதுரை தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா மருத்துவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
கமல்ஹாசன் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறாரா? இந்தியன் 2 டிரைலர்!
இதனைத் தொடர்ந்து, த.வெ.க தலைவரும் நடிகருமான விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் மாநிலத் துணைச் செயலாளரும் மதுரை மாவட்ட வடக்கு மாவட்டத் தலைவருமான விஜயன்பன் கல்லானை சார்பில், 50 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை இலவசமாக வழங்கினார். மேலும், கண்களின் பாதுகாப்பு நலன் சம்மந்தப்பட்ட கருத்துக்களை மருத்துவர் சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில், நடராஜன், தீபக், தினேஷ், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், நல்லோர் குழுவினர்கள் ரவி, அறிவழகன், துரை விஜய பாண்டியன் ராஜேஷ், ஜெகதீஸ்வரன், செல்வி, கல்யாணி மற்றும் ராய பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu