மதுரை அரசு பேருந்தின் அவல நிலை: கண்டு கொள்ளுமா போக்குவரத்துக்கழகம்..?
தூக்கினால் கையேடு வரும் பேருந்து இருக்கை
மதுரை:
மதுரை மாநகரில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் முறையான பராமரிப்பு இன்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த வகையில், மதுரை மாட்டுத்தாவணி - மாடக்குளம் செல்லும் மாநகர பேருந்து( TN58N2063) ஒன்றில் இருக்கைகள் பழுதாகி துருப்பிடித்த நிலையில், கடுமையாக சேதமடைந்து குப்பை ஏற்றிச் செல்லும் லாரியை விட மிகவும் மோசமான அபாயகரமான முறையில் காணப்படுகிறது.
மேலும் ,பேருந்தின் முகப்பு விளக்குகளும் எரியாமல் இரவு நேரங்களில் சாலைகளில் பயணிப்பது சவாலாக உள்ளதனால், பேருந்தில் பயணம் செய்யவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
குறிப்பாக, எக்ஸ்பிரஸ் பேருந்துக்கான கட்டணம் வசூலிக்கப்படும் இந்த பேருந்தில் முறையான பராமரிப்பு என்பது இல்லாமல் பேருந்து முழுவதும் குப்பைகளாக நிரம்பியும் காணப்படுகிறது.
இதுகுறித்து, திருப்பரங்குன்றம் பணிமனை நிர்வாகமும், மாநகர போக்குவரத்து நிர்வாகமும் உரிய. முறையில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பஸ் டெப்போவில் , பஸ்கள் பல பட்டைகள் உடைந்தும், இருக்கைகள் உடைந்து காணப்படுகிறது.
ஆகவே , மதுரை அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
பொதுவாகவே அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பு செய்யப்படாமல் வீணாகின்றன. தனியார் நிறுவனங்கள் பேருந்து பராமரிப்பை முறையாக செய்வதால்தான் அவர்களால் பயணிகளை கவர முடிகிறது. பல பயணிகள் தனியார் பேருந்துக்காக காத்திருந்து ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
இது தமிழகம் முழுவதுமே நடந்து வருகிறது. அரசு பேருந்துகள் பணிமனைகளில் முறையாக பராமரிப்பு செய்யப்பட்டால் பேருந்துகள் நன்றாக இருக்கும். அரசு பேருந்துக்குள் கிடக்கும் குப்பைகளை கூட்டுவது கூட கிடையாது.
இத்தனைக்கும் பேருந்துகளை சுத்தம் செய்வதற்கு தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பேருந்தை கூட்டி, கழுவுதல் போன்ற வேலைகளை செய்யவேண்டும். ஆனால், பணிமனைகளில் பொறியாளர்கள் அல்லது மேற்பார்வையாளர்கள் பேருந்துகளை சுத்தம் செய்கிறார்களா என்பதை கண்காணிக்கவேண்டும்.
அரசு வெளியில் இருப்போர் சம்பளம் வந்தால் போதும் என்று எண்ணாமல் மக்களுக்காக உண்மையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu