தில்லி குடியரசுதின அணி வகுப்பில் தமிழக ஊர்தி புறக்கணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தில்லி குடியரசுதின அணி வகுப்பில் தமிழக ஊர்தி புறக்கணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பை கண்டித்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்தி புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் 73 வது குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை கண்டிக்கும் விதமாக, திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் அறிவுறுத்தலின் பேரில், திருப்பரங்குன்றம் தியாகராஜர் காலனி பகுதியில், மதுரை திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் வீர கணேசன், செயலாளர் அமர்நாத், செயற்குழு உறுப்பினர் கருப்பையா, மாநில இளைஞரணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட 17 பேர் கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்