மதுரையில் மழைநீர் வாய்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

மதுரையில் மழைநீர் வாய்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
X

சடலம் கண்டெடுக்கப்பட்ட கால்வாய்.

மதுரையில் மழைநீர் வாய்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மதுரை பசும்பொன் நகர், போடி லயன் ரயில்வே தடுப்புச்சுவர் அருகே, சுமார் இரண்டுக்கு இரண்டு அடி கொண்ட வாய்க்காலில், அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதியில், அதிகளவு துர்நாற்றம் வீசவே, அப்பகுதி மக்கள், கால்வாயில் ஏதேனும் அடைத்துள்ளதாக என்று பார்த்தனர்.

அப்போது அந்த வாய்க்கால் சுமார் 40 லிருந்து 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள். சம்பவம் குறித்து, மதுரை சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார், சடலத்தை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தது குறித்து, மாடக்குளம் கிராம நிர்வாக அதிகாரி புகார் கொடுத்ததன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த சுப்பிரமணியபுரம் போலீசார், சிசிடிவி கேமராவில் இவர் எவ்வாறு இறந்தார் அல்லது குடிபோதையில் தவறி கீழே விழுந்தாரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!