/* */

கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

Robbery News - பசுமலை விபூதி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
X
கொள்ளையடிக்கப்பட்ட கோவிலில் விசாரணை நடத்தும் போலீசார்.

Robbery News -மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை விபூதி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பசுமலை ஜி.எஸ்.டி. சாலையில் அருள்மிகு விபூதி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று காலையில் வழக்கம்போல் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது, அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக , கோயில் நிர்வாகிகள்ன மற்றும் திருப்பரங்குன்றம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலில் உள்ள கைரேகை சேகரித்தனர். கோயில் உண்டியலில் சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, இரண்டு முறை இந்த கோவிலில் உண்டியல் இதுபோன்ற திருட்டு நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாவது முறையாக திருட்டு நடைபெற்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Jun 2022 11:27 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்