மதுரை வெள்ளக்கல் பகுதியில் பெங்களூர் ஆராய்ச்சி நிறுவனத்தார் ஆய்வு..!
மதுரை வெள்ளக்கல் பகுதியில் கண்மாய்க் கரையில், ஆராய்ச்சி நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.
மதுரை:
மதுரை மாநகராட்சி அவனியாபுரம், அயன்பாப்பாக்குடி கண்மாய் மற்றும் நீர்வரத்து பகுதிகளில் நுரைகள் வருவது தொடர்பாக, பெங்களுர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி அவனியாபுரம் அயன்பாப்பாக்குடி பகுதியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. மழைநீர் மற்றும் அருகில் உள்ள மழைநீர் வடிகால்கள் மூலம் இக்கண்மாயில் நீர்வரத்து அமைகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அயன்பாப்பாக்குடி கண்மாயில் செல்லும் தண்ணீரில் நுரைகள் அதிகம் காணப்பட்டு இருந்தது. இதனால், அயன்பாப்பாக்குடியில் செல்லும் கண்மாயின் நீரை நேரில் வந்து ஆராய்ச்சி மேற்கொள்ளுமாறு இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் பெங்களுர் நிறுவனத்திற்கு மாநகராட்சியின் சார்பில் அழைக்கப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில், இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் பெங்களுர் நிறுவனத்தின் சார்பில் பேராசிரியர் லட்சுமிநாராயணராவ் மற்றும் பேராசிரியர் சாணக்யா ஆகியோர் அவனியாபுரம் அயன்பாப்பாக்குடி கண்மாயில் எவ்வாறு நுரைகள் வருகிறது என்பது குறித்து அயன்பாப்பாக்குடி கண்மாய் மற்றும் நீர்வரத்து பகுதிகளில், ஆய்வு மேற்கொண்டனர். கண்மாயில் உள்ள நீரினை மேலும் பரிசோதனை செய்வதற்கு ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து சென்று உள்ளனர்.
இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கிய லெட்சுமி, உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவிப்பொறியாளர் செல்வவிநாயகம் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu