அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு..!

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு..!
X

மதுரை அருகே அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ,முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.

சோழவந்தான் பகுதியில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார்.

சோழவந்தான் :

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் குருவித்துறை தாமோதரன் பட்டி முள்ளிபள்ளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி கிராமத்தில் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வாடிப்பட்டிதெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் கருப்பையா மாணிக்கம், யூனியன் பெருந்தலைவர் மகாலட்சுமிராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரூர் செயலாளர் முருகேசன்,பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய அவைத்தலைவர் முனியாண்டி வரவேற்றார். மன்னாடிமங்கலத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். மாவட்ட நிர்வாகிகள் துரை தன்ராஜ், மகேந்திர பாண்டி, மகளிர் அணி லட்சுமி, சோழவந்தான் நிர்வாகிகள், இளைஞர் அணி கேபிள் மணி, தியாகு துரைக்கண்ணன், சண்முக பாண்டியராஜா, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கராஜன், அழகுமலை ராஜேந்திரன், பால் முதலியார் கல்லாங்காடு கிளை ராமு தங்கச்சாமி,காமாட்சி குமார், தகவல் தொழில்நுட்ப மருதுபாண்டி, வெங்கடேசன், சதீஷ் பிரபு ,,மகளிர் அணி சந்திரா, தனலட்சுமி, உஷா மற்றும் சத்யா ஆகியோரும் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சேது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள், குருவித்துறை கிராமத்தில் மகளிர் அணி வனிதா ,விஜய் பாபு,,லாவண்யா,காடுபட்டி பால்பாண்டி உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் இளைஞர்இளம் பெண்கள்பாசறை மற்றும் மகளிர் அணி உள்பட அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!