மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு
X

மதுரை அருகே விரகனூரில் சசிகலாவை வரவேற்க காத்திருந்த அமமுக நிர்வாகிகள்

கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் தேவர் சிலை, தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்

பசும்பொன் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரைக்கு வந்த சசிகலாவிற்கு: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரைக்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் தேவர் திருமகனார் திருவுருவச் சிலை மற்றும் தெப்பக் குளத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், பசும்பொன் சென்ற சசிகலாவிற்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், டி. கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றியம் சார்பில், மதுரை விரகனூர் சாலை அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய கழகச் செயலாளர் பழனி முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!