வடகாடுபட்டி பகுதியில் பெண்ணிடம் வம்பிழுக்கும் இளைஞர்கள்! வைரலாகும் வீடியோ!

வடகாடுபட்டி பகுதியில் பெண்ணிடம் வம்பிழுக்கும் இளைஞர்கள்! வைரலாகும் வீடியோ!
X

போதையில், இளைஞர்கள் பெண்ணிடம் தகராறு.

விக்கிரமங்கலம் அருகே வடகாடுபட்டியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்

விக்கிரமங்கலம் அருகே வடகாடுபட்டியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் பெண்ணை தாக்கும் வீடியோ வைரல்

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே வடகாடு பட்டியில், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் அதனை அருந்தும் இளைஞர்கள் அந்தப் பகுதியில் வருவோர் போவோரை கத்தி கட்டை கம்பியால் தாக்கி வருகின்றனர். மேலும், தகாத வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனராம்.

தடை செய்யப்பட்ட கஞ்சா, போதை பொருட்கள் சில இளைஞர்கள் மூலமாக அனைவருக்கும் சர்வசாதார்ணமாக கிடைத்து வருகின்றது. இதனால், அப்பகுதி இளைஞர்கள் சீர்கெட்டு வருகின்றனர்.

இதனால், காடுப்பட்டி, விக்கிரமங்கலம் மக்கள் எப்போதும் பீதியில் இருந்து வருகின்றனராம்.

இது போன்ற சம்பவங்கள் நீடித்தால், பல இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகவும், உயிர் பலிகள் கூட ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும்,

காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். மேலும், போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை செய்து, விக்கிரமங்கலம் காடுபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா போதை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

நேற்று இரவு போதையில் இளைஞர்கள் பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது. தாக்குதலுக்கு ஆளான பெண் படுகாயத்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் ,மாவட்ட எஸ்பி தீவிர விசாரணையில் ஈடுபட்டு போதை வஸ்துகளை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என,

இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!