சோழவந்தானில் மூதாட்டியிடம் வம்பு செய்த இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட மணிமாறன்.
மதுரை அருகே சோழவந்தான் காவல் நிலைய சரகம் சோழவந்தான் தெற்கு தெருவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி எவ்வித ஆதரவும் இன்றி அப்பகுதியில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
அவர், எப்போதும் வழக்கமாக இரவு நேரத்தில் சோழவந்தான் ரம்யா சில்க் என்ற கடையின் முன்பு தங்கி வந்துள்ளார். இந்நிலையில், வழக்கமாக அவர் தூங்கும் இடத்தில் இல்லாமல் சற்று அருகில் பேச்சு மூச்சு இன்றி இருந்துள்ளார்.
இதைக்கண்ட காவலர்கள், அப்பகுதியில் ரோந்து சுற்றி வரும்பொழுது சந்தேகத்திற்கிடமான முறையில், இருந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நபரான, சோழவந்தான் கருப்பட்டியை சேர்ந்த சண்முகம் மகன் மணிமாறன் என்பவரை பிடித்து விசாரணை செய்யப்பட்டது.
மேலும், மேற்படி ரம்யா சில்க்ஸில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்ததில், மேற்படி மணிமாறன் என்பவர் மூதாட்டியை தூக்கிக் கொண்டு செல்வது தெரியவந்தது.
பின்னர் சந்தேகநபர் மணிமாறனை விசாரணை செய்தபோது தான் மூதாட்டியிடம் வன்புணர்ச்சி செய்தபோது, அம்மூதாட்டி இறந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை கைது செய்த சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் சிவபாலன் தலைமையிலான தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu