சோழவந்தான் பேரூராட்சி சார்பில் மஞ்சள் பை விழிப்புணர்வு பிரசாரம்
சோழவந்தான் பேரூராட்சி சார்பில் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகே மஞ்சப் பை விழிப்புணர்வு ஏற்படுத்திய நிர்வாகிகள்
சோழவந்தான் பேரூராட்சி சார்பாக ஆடிப்பெருக்கினை முன்னிட்டு பொது மக்களுக்கு மஞ்சள்பை வழங்கி விழிப்புணர்வு:
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி பகுதியில், சுற்றுச்சூழல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்க்கும் விதமாக துணி பைகளை பயன்படுத்திட மஞ்சள் பைகளை அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக இன்று பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பேரூராட்சியின் சேர்மன் ஜெயராமன், பேரூர் நகர செயலாளர் சத்யபிரகாஷ், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உஷாராணி , செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் வழங்கினார்கள். ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் இன்று கோவிலுக்கு வந்து செல்வதால் அப்பகுதியில் அனைவருக்கும் துணி பைகள் வழங்கி பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்க்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டனர்.பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மீண்டும் மஞ்சப்பை திட்டம் பற்றி...
பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலும் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ல் தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவும் அதன் பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் இதையடுத்து.பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த ப்பட்டுள்ளது. .
'மஞ்சள்' துணிப் பைகள் அல்லது 'மஞ்சப்பை' என்று தமிழில் அழைக்கப்படும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் , இந்தச் சூழலுக்கு உகந்த பையை மீண்டும் பயன்படுத்தவும், பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்தவும் மக்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .
ஜனவரி 1, 2019 முதல் 14 வகையான பிளாஸ்டிக்குகளின் உற்பத்தி, பயன்பாடு, சேமிப்பு, விநியோகம், போக்குவரத்து அல்லது விற்பனை ஆகியவற்றுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் என்பது மளிகைப் பைகள், உணவுப் பொட்டலங்கள், பாட்டில்கள் மற்றும் ஸ்ட்ராக்கள் போன்ற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும், அல்லது சில சமயங்களில் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களைக் குறிக்கிறது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu