திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் உலக சுற்று சூழல் தினம்
சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் மாணவர்கள்.
திருவேடகம் மேற்கு விவேகானந்தா கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் மேற்கு விவேகானந்தா கல்லூரியில் ,உலக சுற்றுச்சூழல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவத்தை பற்றி, முதல்வர் முனைவர் வெங்கடேசன் மாணவர்களிடையே உரையாற்றினார். மாணவர்கள் ஒவ்வொருவரும் மரக்கன்றுகள் நடுவதின் அவசியத்தையும் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தையும் மண்ணின் வளத்தின் மேம்பாட்டையும் பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியத்தையும் புரிந்து தங்களை சார்ந்த கிராம சமுதாய மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதலின் அவசியத்தை விளக்கினார்.
மேலும், கல்லூரி வளாகத்தில் பசுமை வளர்ச்சி பற்றிய விவரங்களை கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தானாக முளைத்த புங்கை மற்றும் மகிழ மர நாற்றுகளை எடுத்து கேம்பஸ் நர்சரியில் பராமரித்தலின் அவசியத்தையும் விளக்கினார். கேம்பஸ் நர்சரியில் மாணவர்களால் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை வளாகத்திலேயே பசுமையை உயர்த்தும் எண்ணத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன.இந்த நிகழ்ச்சியை, கல்லூரியின் அகத்தர அமைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு, தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் சௌந்தரராஜு மற்றும் எக்கோ கிளப்மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu