சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
X

சோழவந்தான் அருகே காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் கேட்டுகிராம மக்கள் காலி குடத்துடன் சாலை மறியல் செய்தனர். காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த மறியல் போராட்டத்தினால் பள்ளி மாணவ மாணவிகள் கடும் பாதிப்பு அடைந்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சோழவந்தான் -அணைப்பட்டி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் மற்றும் காலாண்டு தேர்வு எழுத சென்ற மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் தற்போது இங்கு உள்ள கோயில்களில் முளைப்பாரி திருவிழா நடந்து வருவதால் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு உறவினர்கள் வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் குடிநீர் சரிவர வராததால் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காலை நேரம் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரி வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக இரு புறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தது.

சம்பவம் அறிந்து சோழவந்தான் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி தலைவர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பொதுமக்கள் காவல்துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story