மதுக்குடிக்க மனைவி பணம் தரவில்லை: கணவன் தற்கொலை

மதுக்குடிக்க  மனைவி பணம் தரவில்லை: கணவன் தற்கொலை
X

பைல் படம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டகுளத்தில் மதுக்குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்டார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கட்டகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மலையாளம் என்பவரது மகன் சக்திவேல்( 26 ).இவருக்கு குடிப்பழக்கம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், மதுக்குடிப்பதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டபோது அவர் பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சக்திவேல் வீட்டின் பின்புறம் உள்ள தாழ்வாரத்தில் உள்ள கட்டையில் மனைவியின் சேலையை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சக்திவேலை மீட்டு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிப்பதற்கு பணம் கொடுக்கவில்லை என்று மனைவியுடன் சண்டையிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story