வாடிப்பட்டியில் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!

வாடிப்பட்டியில் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!
X

முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வாடிப்பட்டியில் முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஆதரவற்ற நலஅறக்கட்டளை சார்பாக, 32வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டி சேலை, போர்வை, நோட்டு புத்தங்கள் வழங்கும் விழா தளபதி வீரப்பன் திடலில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, தாசில்தார் வி.பார்த்திபன் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த விழாவிற்கு, டாக்டர் சீதாலட்சுமி, கூட்டுறவு துணைப் பதிவாளர்(ஓய்வு) தியாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர்(ஓய்வு)கருப்பையா, திருவள்ளுவர் இலக்கிய மன்றத் தலைவர் தனபாலன், வழக்கறிஞர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புலவர் குருசாமி வரவேற்றார். இதில், முதியோர், மாற்றுதிறனாளிகளுக்கு போர்வை, வேட்டி சேலைகளும், மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தங்களும் 650 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் , முனியப்பன், கேசவன், முன்னாள் கவுன்சிலர் மகாசரவணன், அய்யனார்,கார்த்திக்,ராமலட்சுமி, செல்வம், நாகராஜ், யுவராஜ், விஜயராகவன், கோமதி,விஜயலெட்சுமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், டி.எம்.சரவணன் நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை, அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஏ.வி.பிரிதிவிராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பிறருக்கு உதவுதல் என்பது கடவுளுக்கு செய்யும் தொண்டாகும். கோயிலுக்குச் செலவழிக்கும் ஆயிரக்கணக்கான ரூபாயில் கொஞ்சத்தை இதைப்போன்ற ஆதரவற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது சிறப்பானதாகும். இதற்கு இறைவனின் நேரடி ஆசியும் கிடைக்கும்.

Tags

Next Story
அல்சர் A to Z...அறிகுறிகள் முதல் தடுப்பு வழிகள் வரை..!உடனே இதை தெரிஞ்சுக்கோங்க..