மதுரை, சோழவந்தானில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி
மதுரை சோழவந்தான் பகுதிகளில் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் பேரணை முதல் கள்ளந்திரி வரை பெரியாறு பாசனக் கால்வாய் மூலம் 45ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடைகின்றன. கடந்த மாதம் புயல் மற்றும் பருவமழை காரணமாக பெரியாறு அணையில் நீர்மட்டம் கிடுகிடுவென்று உயர தொடங்கியது. அதனால், இருபோக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
12 வருடங்களுக்கு பிறகு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், தண்ணீர் வருவதன் தகவல் அறிந்த விவசாயிகள் கிணற்று நீர் மூலம் தண்ணீர் பாய்ச்சி நாற்றங்கால் அமைக்கும்பணியை தொடங்கியுள்ளனர். வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தாளில் உள்ள ஒரு வயலில் நாற்றங்கால் அமைக்க பரம்பு அடிக்கும் பணி நடந்தது.
மேலும், இருபோக சாகுபடி நிலங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவசாயிகள் கூறுகையில், மேட்டுநீரேத்தான் உள்ள 24 ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாயில் தண்ணீர் தேக்கினால், இந்த பகுதி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இந்த கண்மாய் முழுவதும் ஆக்கிரமித்து நிறைந்துள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயில் நீர் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதேபோல், மீனவர்களுக்கு மானியம் வழங்குவது போல் விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்றும், 45 நாட்களுக்கு தண்ணீர் கொடுப்பது என்பதை மாற்றி 55 நாட்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu