மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள்: ஆட்சியர் தகவல்
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெறுவதாக ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் .எஸ்.அனீஷ் சேகர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகள் வருகின்ற 15.03.2022-அன்று வரை 5 பிரிவுகளில், 3 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவித்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 1. வினாடி - வினாப் போட்டி 2. வாசகம் எழுதும் போட்டி 3.பாட்டுப் போட்டி 4.காணொலிக்காட்சி தயாரிக்கும் போட்டி மற்றும் 5. விளம்பரப் பட வடிவமைப்புப் போட்டி என 5 பிரிவுகளில் 3 வகைகளில் (நிறுவனம் சார்ந்த நபர்களுக்கான போட்டி வகை தொழில் சார்ந்தவர் வகை மற்றும் தொழில்சாராதவர் வகை) விழிப்புணர்வு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த விழிப்புணர்வு போட்டிகளில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தொழில் சார்ந்தவர்கள் மற்றும் தொழில்சாராதவர்கள் என அனைவரும் பங்கெடுத்துக் கொள்ளலாம். இப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் தங்களது திறமைகளை வெளிகொணரலாம். மேலும், இப்போட்டியில் பங்கேற்பவர்கள் போட்டியின் விரிவான வழிகாட்டுதல்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை, வலைதளத்தைப் பயன்படுத்தி விவரங்களை தெரிந்து கொள்ளலாம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, நடைபெறும் வாக்காளர் விழிப்புணர்புப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு கீழ்க்கண்டவாறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் நிறுவனம் சார்ந்த வகையினருக்கு முதல் பரிசு ரூபாய் 1 இலட்சம் இரண்டாம் பரிசு ரூபாய் 50 ஆயிரம்இ மூன்றாம் பரிசு ரூபாய் 30 ஆயிரம் மற்றும் சிறப்புப் பரிசு ரூபாய் 15 ஆயிரம் எனவும் தொழில் சார்ந்தவர் வகையினருக்கு முதல் பரிசு ரூபாய் 50 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 30 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் சிறப்புப் பரிசு ரூபாய் 10 ஆயிரம் எனவும் மற்றும் தொழில்சாராதவர் வகையினருக்கு முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 7 ஆயிரத்து 500 மற்றும் சிறப்புப் பரிசு ரூபாய் 3 ஆயிரம் எனவும்
காணொலிகாட்சி உருவாக்கும் போட்டியில் வெற்றி பெறும் நிறுவனம் சார்ந்த வகையினருக்கு முதல் பரிசு ரூபாய் 2 இலட்சம் இரண்டாம் பரிசு ரூபாய் 1 இலட்சம், மூன்றாம் பரிசு ரூபாய் 75 ஆயிரம் மற்றும் சிறப்புப் பரிசு ரூபாய் 30 ஆயிரம் எனவும் தொழில் சார்ந்தவர் வகையினருக்கு முதல் பரிசு ரூபாய் 50 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 30 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் சிறப்புப் பரிசு ரூபாய் 10 ஆயிரம் எனவும் மற்றும் தொழில்சாராதவர் வகையினருக்கு முதல் பரிசு ரூபாய் 30 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் மற்றும் சிறப்புப் பரிசு ரூபாய் 5 ஆயிரம் எனவும்,
விளம்பரப்பட வடிவமைப்பு போட்டியில் வெற்றி பெறும் வெற்றி பெறும் நிறுவனம் சார்ந்த வகையினருக்கு முதல் பரிசு ரூபாய் 50 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 30 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் சிறப்புப் பரிசு ரூபாய் 10 ஆயிரம் எனவும், தொழில் சார்ந்தவர் வகையினருக்கு முதல் பரிசு ரூபாய் 30 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் மற்றும் சிறப்புப் பரிசு ரூபாய் 5 ஆயிரம் எனவும் மற்றும் தொழில்சாராதவர் வகையினருக்கு முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 7 ஆயிரத்து 500 மற்றும் சிறப்புப் பரிசு ரூபாய் 3 ஆயிரம் எனவும்
வாசகம் எழுதும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 7 ஆயிரத்து 500 மற்றும் சிறப்புப் பரிசாக ஐம்பது பங்கேற்பாளர்களுக்கு தலா ரூபாய் 2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளன.
மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அனைத்து வகையான முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியும் நிறைவடைந்துள்ளது. வாக்குச்சாவடி மைங்களுக்கான ரசீது வழங்கும் பணியானது 32 சதவீதம் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் 1215 வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu