திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கல்லூரி நிறுவனர் தின விழா

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில்  கல்லூரி நிறுவனர் தின விழா
X

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி நிறுவனர் தின விழாவில் பரிசு பெற்ற மாணவர்கள்.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 52-ம் ஆண்டு கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜெயந்தி தின விழா நடைபெற்றது.

மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 52-வது ஆண்டு கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துத்துடன் விழா இனிதே துவங்கப்பட்டது. கல்லூரி பஜனை குழு மாணவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு பாடலை பாடினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார்.

ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் பற்றி கல்லூரியின் மூத்த பேராசிரியர் முனைவர் நாகேந்திரன் உரையாற்றினார். விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த ஆசியுரை வழங்கினார். கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மனந்த முன்னிலை வகித்தார்.

விவேகானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன் கல்லூரி ஆண்டறிக்கையை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் சதாசிவம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

துறை சார்ந்த பாடப்பிரிவுகள், நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல்வேறு சேவை சார்ந்த கல்லூரி குழுவில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் சதாசிவம் கல்லூரி நாள் சிறப்புரை ஆற்றி பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். கல்லூரியின் அகதர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதிஷ்பாபு நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர் குமரேசன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture