விவேகானந்த கல்லூரி சார்பில் வாடிப்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா:
விவேகானந்த கல்லூரி சார்பில் வாடிப்பட்டியில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழா
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே,திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், மாணவர்கள் பசுமை அட்டை திட்டம் மற்றும் என் மண் என் தேசம் என்ற இந்திய அரசின் அமைப்பின் கீழ் அவரவர் கிராமங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வாக மாணவர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் வெங்கடேசன் இந்த நிகழ்வை துவக்கி வைத்தார். 1000 மகாகனி மரக்கன்றுகளை மாணவர்களுக்கு விவேகானந்த கல்லூரி ஆசிரியர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த, முதன்மையர் முனைவர் ஜெய்சங்கர், அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதிஷ்பாபு முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் மாணவர்களிடையே மரம் வளர்த்தல் பற்றியும் உலக சுற்றுச்சூழல் பற்றியும் சிறப்புரை ஆற்றினார். ஒவ்வொரு மாணவருக்கும் மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டது. விவேகானந்த கல்லூரியின் பசுமை அட்டை திட்டத்தில் (Green Card Scheme) மாணவர்கள் அவர்தம் கிராமங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தாங்கள் பெற்ற மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் வேண்டும். மேலும், மாணவர்கள் மரக்கன்று நடுதல் பற்றிய உறுதிமொழியினை உறுதி எடுத்துக்கொண்டனர்.
நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் அசோக்குமார், முனைவர் ரமேஷ் குமார், ரகு, முனைவர் ராஜ்குமார், தினகரன், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் சந்திரசேகரன், முனைவர் சௌந்தரராஜூ, முனைவர் எல்லைராஜா, தர்மானந்தம்,மாரிமுத்து, முனைவர் காமாட்சி, மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu