அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா

அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா
X

அலங்காநல்லூர் அருகே, விநாயகர் கருப்பு சாமி ஆலய பெருந்திருவிழா நடைபெற்றது.

அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

சின்ன ஊர்சேரி கிராமத்தில் ஸ்ரீ சக்திவிநாயகர், ஸ்ரீ ஜோதிசித்தி கருப்புசாமி ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ உறங்காபுலி ஆகிய தெய்வங்களுக்கு உற்சவ விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஊர்சேரி கிராமத்தில்ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ ஜோதிசித்தி கருப்புசாமி ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ உறங்காபுலி ஆகிய தெய்வங்களுக்கு சித்திரை மாத உற்சவ விழா கடந்த 11ஆம் தேதி வியாழக்கிழமை முகூர்த்த கால் ஊன்றும் பணியுடன் தொடங்கியது.அதனை தொடர்ந்து காப்பு கட்டுதல் நடைபெற்றது.

16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முளைப்பாரி போடுதல், பெண்கள் காப்பு கட்டுதல், அதனை தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகருக்கு ஹோமங்கள், கோ பூஜை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அன்று இரவு மேளதாளத்துடன் மரியாதைக்காரர்களை அழைத்து கோவில் சாமி பெட்டி தூக்கி ஸ்ரீ ஜோதி சித்திகருப்புசாமி கோவில் வந்தடைந்தனர் அன்று இரவு வான வேடிக்கை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சக்தி கிடாய் வெட்டுதல், பொங்கல் வைத்தல் ,மாவிளக்கு எடுத்தல் ,நேர்த்திக்கடன் செலுத்துதல் ஆகியவை நடைபெற்றன.

24ந்தேதி புதன்கிழமை அன்று வானவேடிக்கையுடன் மேளம் தாளங்கள் முழங்க ஆற்றுக்கு கரகம் எடுத்தும் முளைப்பாரியுடன் சென்று கரகம் கரைத்தனர். தொடர்ந்து கிராமியநிகழ்ச்சி ,வள்ளி திருமண நாடகம் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை சின்ன ஊர்சேரி கிராம பொதுமக்கள் கிராம கமிட்டியாளர்கள் கிராம மரியாதைக்காரர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future