வாடிப்பட்டி அருகே வடுகபட்டியில் கிராம சபைக் கூட்டம்
வாடிப்பட்டி அருகே வடுகபட்டி கிராமத்தில், மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார்.
மதுரை வாடிப்பட்டி அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, வடுகப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனே பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்த வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சரை பொதுமக்கள் பாராட்டினர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வடுகபட்டி கிராமத்தில், மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கிராமசபை கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் முன்னிலை வகித்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. வரவேற்றார். தொடர்ந்து, ஊராட்சி மன்றத்தில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது. பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது,அங்கு உள்ள வடுகபட்டி கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி செல்ல மற்றும் வேலைக்கு செல்வோர் பேருந்து இல்லாமல் அவதிப்படுவதாக கூறினர்.
உடனடியாக, போக்குவரத்து துறை மேலாளர் தொடர்பு கொண்டு பேசிய பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி நாளை முதல் வாடிப்பட்டியில் இருந்து காலை 8 மணிக்கும் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாலை 4 மணிக்கும் உடனடியாக பேருந்து இயக்க உத்தரவிட்டார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பேருந்தை இயக்க நடவடிக்கை எடுத்தவணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி பொதுமக்கள் பாராட்டினர்.தொடர்ந்து, பொதுமக்களிடம் நலத்திட்ட உதவி வழங்கி சுற்றுப்புற பெருமையை மேம்படுத்தும் வகையில் மஞ்சப்பை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசியபோது:மகளிருக்கு என ஒதுக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் பொது பேருந்துகளில் மக்கள் இலவசமாக செல்வது குறித்து பெருமிதம் கொண்டார்.தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சுமார் 140 கோடி மதிப்பிலான பொருள்கள் கொண்டு செல்ல மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், வடுகபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பாலமுருகன் ஊராட்சித் செயலாளர் மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேணி பால்பாண்டி, சோழவந்தான்பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி, வாடிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் பால ராஜேந்திரன், வாடிப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர், வழக்கறிஞர் கார்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ,சோழவந்தான் பேரூராட்சி பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின், சோழவந்தான் பேரூர் செயலாளர் முனியாண்டி, அலங்காநல்லூர் ஒன்றியம்
செயலாளர் கென்னடி, சோழவந்தான் பேரூராட்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ், திருவேடகம் கிளைச் செயலாளர் ராஜா என்ற பெரியகருப்பன், நிர்வாகிகள் திருவேடகம் சி. பி.ஆர். சரவணன், அண்ணாதுரை, பெரியசாமி, எஸ்.எம். பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற த்தலைவர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu