விஜயகாந்த் பிறந்த தினம்: சோழவந்தான், மேலக்காலில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

விஜயகாந்த் பிறந்த தினம்: சோழவந்தான், மேலக்காலில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

சோழவந்தானில் இனிப்பு வழங்கிய தேமுதிகவினர்.

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான், மேலக்காலில் தேமுதிகவின் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

சோழவந்தானில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. இங்குள்ள ஜெனகை மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை, பூஜைகள் செய்து பொதுமக்களுக்க இனிப்பு வழங்கப்பட்டது. தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ், கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், நகர பொறுப்பாளர் கிருஷ்ணன், துணை செயலாளர் கோபால் ,பொருளாளர் முருகன், ஒன்றிய மகளிர் அணி நிர்வாகி நிர்மலா, நகர நிர்வாகி சுப்புலட்சுமி, ஒன்றிய தொண்டரணி சரவணன், நிர்வாகிகள் சங்கிலி, ஜெயவீரன் ,உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலக்காலில், முத்துப்பாண்டி தலைமையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏழை எளியோருக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!