Veterinary Department Special Camp சோழவந்தான் அருகேகால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

சோழவந்தான் அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
Veterinary Department Special Camp
தமிழகத்தில் அண்மைக்காலமாக ஆங்காங்கே அவ்வப்போது கனமழையும், ஒரு சில இடங்களில் பரவலான மழையும் பெய்து வருகிறது. மேலும் இன்னும் ஒரு சில தினங்களில் குளிர்காலம் துவங்கப் போகும் நிலையில் பருவ நிலை மாற்றங்களும் நடக்க உள்ளன. கால்நடைகள் மழையிலும்வெயிலிலும் மாறி மாறி உலா வருவதால் அதன் உடல்நிலையைப் பற்றி நாம் அவ்வப்போது கண்காணிப்பது என்பது மிக மிக அவசியம். ஒரு சில கால்நடைகள் சரியான முறையில் தீனி எடுக்காதபோதுதான் அதன் உரிமையாளர் உடல்நலம் சரியில்லை என்பதையே உணர்கிறார். இதுபோல் பல உதாரணங்களைச் சொல்லலாம். தமிழக கால்நடைத்துறை சார்பில் அவ்வப்போது மருத்துவ சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்துச்சென்று அதற்கேற்ற சிகிச்சையினை மேற்கொள்வதால் பல கால்நடைகளின் ஆ ரோக்யம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது. அந்த வகையில், .
மதுரை அருகே,சோழவந்தான், திருவாலவாய நல்லூர் ஊராட்சியில்கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர். நடராஜகுமார் திருமங்கலம் உதவி இயக்குநர் டாக்டர். ரவிச்சந்திரன் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர். ஜான் சுரேஷ் தாசன் டாக்டர். திருநாவுக்கரசன் டாக்டர் .சுரேஷ் ஆகியோருடன் கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் இதர சேவைகள் அளித்தனர்.
முகாமை, ஊராட்சி மன்றத்தலைவர் சகுபர் சாதிக் துவக்கி வைத்தார்.முகாமில், நல்ல முறையில் கன்றுகளை வளர்த்த மூன்று பயனாளிகள் மற்றும் நல்ல முறையில் மாடுகள் அதிகம் வளர்த்து வரும் மூன்று பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கிராமங்களில், கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதால், விவசாயிகள் பலர் பெறுகின்றனர்.அத்துடன் சிறந்த முறையில், பசுக்களை வளர்ப்புபோருக்கு , பரிசுகளை வழங்குவதின் மூலம், கால்நடை வளர்ப்பு தீவிரப்படுத்துவதாக , அமைந்துள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu