வாடிப்பட்டியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 93 ஆயிரம் தேங்காய்கள் ஏலம்

வாடிப்பட்டியில்  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 93 ஆயிரம் தேங்காய்கள் ஏலம்
X

பைல்படம்

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கூடுதல் இயக்குனர் திலகவதி இங்கு நேரில் ஆய்வு செய்தார்

மதுரை விற்பனைக் குழுவின் வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று 38 விவசாயிகளின் 93 ஆயிரத்து 356 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில், நடைபெற்ற இன்றைய ஏலத்தில் 38 விவசாயிகளின் 93356 தேங்காய்கள் 47குவியலாக ஏலம் விடப்பட்டது. மேலும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கூடுதல் இயக்குனர் திலகவதி ஆய்வு செய்ததை தெடர்ந்து, மதுரை விற்பனைக் குழுவின் செயலாளர் மெர்சி ஜெயராணி மற்றும் உரிம இடங்களின் ஆய்வாளர் திருமுருகன் ஆகியோர்களால் ஏல நடைமுறை பற்றி விளக்கி கூறப்பட்டது.

இன்று நடந்த ஏலத்தில் 13 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இன்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக விலையாக ரூ 14.85 க்கும் குறைந்த பட்சமாக ரூ 7.1 க்கும் சராசரியாக ரூ 8.48 க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மேலும், ரூபாய் 8.67 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது .மேலும் ,5 விவசாயின் 391 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில், 5 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக 97.06 ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. ரூ. 32590க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் சீனிகுருசாமி, 9600802823-என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
ai healthcare products