Vadipatti Free Eye Camp மதுரை அருகே வாடிப்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

Vadipatti  Free Eye Camp  மதுரை அருகே வாடிப்பட்டியில்  இலவச கண் சிகிச்சை முகாம்
X

வாடிப்பட்டியில் நடைபெற்ற, இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

Vadipatti Free Eye Camp மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் இணைந்து தாய் கல்வி குழுமம் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

Vadipatti Free Eye Camp

மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் இணைந்து தாய் கல்வி குழுமம் சார்பாக முன்னாள் பேரூராட்சித் தலைவர் ராமச்சந்திர கென்னடி நினைவு தினத்தையொட்டி, இலவச கண் பரிசோதனை முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது.

இந்த முகாமிற்கு நற்பணி மன்ற தலைவர் கராத்தே சிவா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். த.மா.க வட்டாரத் தலைவர் பால சரவணன், ஜெ.சி.பி ரங்கசாமி, ரியாகார்த்திக் ஆகியோர் முன்னி லை வகித்தனர். செயலாளர் ஆட்டோ கண்ணன் வரவேற்றார்.

இந்த முகாமில், சங்கரா கண்மருத்துவமனை மருத்துவர் அனுராதா தலைமையில் செவிலியர் பாண்டிசெல்வி, முனீஸ்வரி, சத்யா, வினிதா ஆகியோர் 120 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.அதில், 40 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், ஒருங்கிணைப்பாளர் ஜெயகர் நன்றி தெரிவித்தார்.

இதுபோல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படுகின்றன. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சிறுவயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண்பாதிப்பு ஏற்படுவது சகஜமான ஒன்றாகிவிட்டது. அதுவும் தற்காலத்தில் இளைஞர்கள் கையில் 24மணிநேரமும் ஸ்மார்ட்போன் சகிதமே காணப்படுகிறார்கள். அதுவும் இரவு நேரத்தில் அதிக பவர் கொண்ட டிஸ்பிளேயை வெளிச்சம் இல்லாத இடத்தில் வைத்து அதிக நேரம் பார்ப்பதால் அவர்களின் கண்களில் பாதிப்பு ஏற்படுவது தொடர்கிறது. இதனால் ஏழை எளியோர் முதல் வசதி படைத்தவர்கள் வரை கண் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது நாகரிக காலத்தில். எனவே கண்களில் கோளாறு என தெரிந்தால் உடனே கண் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுங்க அல்லது இது போன்ற இலவச முகாம்களில் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொள்ளுங்க.... அதுவே உங்களுக்கு நல்லது பாதுகாப்பானது.

Tags

Next Story