வாடிப்பட்டி திமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

வாடிப்பட்டி திமுக சார்பில் அண்ணா நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள்..
Vadipatti Dmk Anna Memorial Day
பேரறிஞர்அண்ணா 55வதுநினைவு தினத்தையொட்டி வாடிப்பட்டியில்தி.மு.க., சார்பாக மௌன ஊர்வலம் வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அண்ணா நினைவு தினத்தையொட்டி தி.மு.க சார்பாக வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் பழைய நீதிமன்றதிலிருந்து புறப்பட்டு தி.மு.கவினர் மௌன ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மௌனஅஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன்,அவைத்தலைவர் பாலசுப்ரமணியன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் மருதுபாண்டி, சசிகுமார், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன்மாறன், பேரூராட்சித் தலைவர்கள் ஜெயராமன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் பேரூர் செயலாளர்கள் பால்பாண்டியன், சத்யபிரகாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, முன்னாள் பேரூர்செயலாளர் மு.பா.பிரகாஷ், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அயூப்கான், பங்களா மூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், இளைஞர் அணி வினோத் குமார், அரவிந்தன் ரங்கநாதன்,பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu