மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மஞ்சுவிரட்டு..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மஞ்சுவிரட்டு..!
X

குருவித்துறையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டார். 

குருவித்துறையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டார்.

குருவித்துறையில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டார்.

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே, குருவித்துறை கிராமத்தில் பவித்ரன் நினைவு குழு நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது போட்டியில் ஒரு காளைக்கு 20 நிமிடமும் ஒன்பது வீரர்களும் களமிறங்கினர் மதுரை தேனி சிவகங்கை திருச்சி புதுக்கோட்டை ஆகிய மாவட்டத்தில் இருந்து காளைகள் கலந்து கொண்டன வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன்மாறன் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை குருவித்துறை கிராமத்தினர் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை வடமாடு சங்கம் ஆகியோர் செய்திருந்தனர் சமயநல்லூர் டி எஸ் பி ஆனந்தராஜ் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் காடு பட்டி சிவகுமார் உள்பட நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

வடம் என்றால் தமிழில் "கயிறு" என்று பொருள்படும். காளையை 15 மீட்டர் கயிற்றில் கட்டி அந்த விட்டத்துக்குள்ளே நடைபெறுவதுதான் வடம் மஞ்சுவிரட்டு. 7 அல்லது 8 பேர் கொண்ட அணி அந்த காளையை 30 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழரின் வீர விளையாட்டு என்று கருதப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் காளைகளை வைத்து விளையாடுவது மட்டுமல்ல, ஆடுகளை வைத்து கிடா சண்டை, கோழிகளை வைத்து சேவசண்டை என்றும் இருக்கிறது. தற்போதைய நிலையில் மக்களிடையே ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்ற விளையாட்டுகளே அதிகம் தெரியப்படுகிறது.

Tags

Next Story
கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் துறை சாதனை - பெரியார் பல்கலை போட்டிகளில் இரண்டாம் இடம்