நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சோழவந்தானில் பாஜக ஆலோசனை கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சோழவந்தானில் பாஜக ஆலோசனை கூட்டம்
X

சோழவந்தானில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாஜக ஆலோசனைக் கூட்டம் சோழவந்தானில் நடைபெற்றது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாஜக ஆலோசனைக் கூட்டம் சோழவந்தானில் நடைபெற்றது.

சோழவந்தான் பாஜக உழவர் சேவை மையத்தில் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாய அணி மாநில செயலாளர் மணி முத்தையா தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரம், மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்த மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றியத் தலைவர் முருகேஸ்வரி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிவாசன் தேர்தல் பணி குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், நிர்வாகிகள் மாயாண்டி, ராஜாராம், பெத்தனபாண்டி, வக்கீல் முத்துமணி, வேட்பாளர்கள் சிவகாமி சிவராம சுந்தரம் ,செல்வி மலைச்சாமி, சுதந்திரம் கல்யாணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!