பாதாளசாக்கடை திட்டம்: மூடி சேதமடைந்ததால் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள் அவதி

பாதாளசாக்கடை திட்டம்: மூடி சேதமடைந்ததால் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள் அவதி
X

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி 70 வது வார்டு, வானமாமலை நகர் முதல் தெருவில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது.

மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் புதிய குடிநீர் குழாய், பாதாள சாக்கடைப் பணிகள் நடக்கின்றன

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி 70 வது வார்டு, வானமாமலை நகர் முதல் தெருவில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், கோயில் பகுதியில் இந்த நீர் தேங்குவதால் பக்தர்கள் முகம் சுழித்தபடி தூர் நாற்றத்தை கடந்து செல்கின்றனர்.

மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் புதிய குடிநீர் குழாய், பாதாள சாக்கடைப் பணிகள் நடக்கின்றன. அதற்காக தாறுமாறாக தோண்டப்பட்டிருப்பதால் சாதா ரண மழைக்கே சாலைகள் சேறும், சகதியுமாக மாறி உள்ளன.பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லையென, உடனடியாக அதிகாரிகள் பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்து சாலையில் கழிவு நீர் தேங்க்காமல் நோய் தொற்றிலிருந்து காக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகராட்சியுடன் இணைந்த விரிவாக்கப் பகுதிகளில் 11 ஆண்டுகளாக பாதாள சாக்கடை வசதி இல்லை. முதற்கட்டமாக 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் வைகை வடகரைக்கு ரூ.231 கோடியில் திட்டம் தயாரானது. கூடல்நகர், ஆனையூர், எஸ்.ஆலங்குலம், திருப்பாலை, கண்ணனேந்தல், பரசுராமன்பட்டி, உத்தங்குடி, மஸ்தான்பட்டி, மேலமடை, ஆத்திக்குளம் உள்ளிட்ட 15 வார்டுகள் பயன் பெறுகின்றன. 45 ஆயிரம் வீடுகள் இணைப்பை பெறுகின்றன. திட்டத்திற்கு மார்ச்சில் டெண்டர் அறிவிப்பு வெளியாகி பணி ஆணை வழங்கப்பட்டது. இந்தப்பணியை 2022 மே மாதம் முடிக்க வேண்டும். ஆனால் தற்போது எதிர்பார்த்த வேகத்தில் பணி நடக்கவில்லை. சர்வே மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. இதனால் பணிகளை முடிக்க பல ஆண்டுகள் ஆகலாம்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 15 வார்டுகளில் 308 கி.மீ. நீளத்திற்கு பாதாள சாக்கடை அமைகிறது. 150 முதல் 300 மி.மீ. விட்டமுள்ள குழாய்கள் பதிக்கப்படும். ஆனையூர், வண்டியூர், விளாங்குடியில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் வருகிறது. அங்கு 9.5 கி.மீ., நீளத்திற்கு 900 மி.மீ. விட்டமுள்ள ராட்சத குழாய்கள் பதிக்கப்படும். குழாய்கள் தயாரிக்கும் தொழிற் கூடத்தில் தரம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மற்ற பணிகள் துவங்கும் என்றனர்.

மதுரை மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில் 45,000 வீடுகள் பயன்பெறும் ரூ.291 கோடி பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். தற்போது 100 வார்டுகளுக்கும் கவுன்சிலர்கள், மேயர், துணைமேயர் இருந்தும் மதுரை யின் சாலைகள் குறித்தும், மக்களின் சிரமங்கள் பற்றியும் உணர வேண்டும். அத்துடன் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை மேயர் நேரடியாக ஆய்வுசெய்து துரிதப்படுத்துவதோடு, இதனால் குடியிருப்புவாசிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!