விலை போகாத கொய்யா பழங்கள்; விவசாயிகள் வேதனை

விலை போகாத கொய்யா பழங்கள்; விவசாயிகள் வேதனை
X

சந்தையில் விலை போகாததால் கீழே கொட்டப்பட்ட கொய்யாப் பழங்கள்.

அலங்காநல்லூர் பகுதியில் அதிகளவில் விலையும் கொய்யா பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு, முடுவார்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் மா, கொய்யா உள்ளிட்ட பழங்களை மதுரை மற்றும் முடுவார்பட்டி பழசந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். 35 கிலோ எடையுள்ள கொய்யா ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை கிடைத்து வந்தது.

ஆனால், தற்போது கொய்யா பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், சந்தையில் விலை சரிந்து 35 கிலோ எடையுள்ள கொய்யா ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை போகிறது. இதனால், தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்றும், வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும், வேதனையடைந்த விவசாயிகள் குவியல் குவியலாக பழங்களை கீழே கொட்டி வருகின்றனர்.

மேலும், இப்பகுதியில் அதிகளவில் விளையும் மா, கொய்யா பழங்களை பதபடுத்த குளிர்பதன கிடங்கும், பழகூழ் தொழிற்சாலையும் அமைத்து உரிய ஆதார விலை கிடைக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!