அலங்காநல்லூர் பகுதிகளில் மஞ்சள் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

அலங்காநல்லூர் பகுதிகளில் மஞ்சள் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
X

பாலமேடு சுற்று வட்டார பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர் பாலமேடு சுற்று வட்டார பகுதியில் கொத்து மஞ்சள் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி.

அலங்காநல்லூர் பாலமேடு சுற்று வட்டார பகுதியில் கொத்து மஞ்சள் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி.

தமிழகம் முழுவதும் பொங்கல் பொங்கும் மங்கள நாளில் வீடுகள் தோறும் பொங்கல் பானைகளில் கொத்துமஞ்சள் கட்டி பொங்கல் வைப்பது தமிழர்களின் பாரம்பரியம். இந்நிலையில், பொங்கல் பண்டிகை வருவதையொட்டி மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பாலமேடு பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.

சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் செடிகள் கொத்து மஞ்சளாக 6 மாதங்களிலும், சமையல் பயன்பாட்டிற்கு ஓராண்டிலும் அறுவடை செய்யப்படுகிறது. வயலில் பறிக்கப்படும் மஞ்சள் செடிகள் கொத்துக்களாக பிரிக்கப்பட்டு, மதுரை உட்பட வெளி மாவட்டங்களுக்கும், குஜராத், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

கொத்து மஞ்சளுக்காக 6 மாதத்தில் அறுவடை செய்வதால், ஏக்கருக்கு ரூ. 60,000 என செலவு குறைவதாகவும், இந்த வருடம் ஓரளவு மழை பெய்ததால் விளைச்சல் அதிகளவில் உள்ளதாகவும், பொங்கலை முன்னிட்டு வியாபாரிகள் வயலுக்கே வந்து கொத்து மஞ்சளை கொள்முதல் செய்வதால், மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு ஏக்கர் கொத்து மஞ்சள் விளைச்சலில் ரூபாய் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக கூறுகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil