சோழவந்தான் அருகே வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி

சோழவந்தான் அருகே வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி
X

முள்ளிப் பள்ளத்தில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

சோழவந்தான் அருகே புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 4-ஆம் ஆண்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 4-ஆம் ஆண்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பள்ளி மாணவர்களுடன் ஐக்கிய கலாம் அறக்கட்டளையினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும் வீரர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினமான மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஐக்கிய கலாம் அறக்கட்டளையினர் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் படங்களை வைத்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளைத் தலைவர் செந்தூர் பாண்டியன், டாக்டர் தினேஷ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மாநிலத் துணைத் தலைவர் மற்றும் கிராம வளர்ச்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் நாகு ஆச்சாரி, மாநில மகளிர் அணி துணைத் தலைவி புஷ்பலதா முள்ளிப் பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தேவி, பெற்றோர் ஆசிரியர் சங்கம் எம். எஸ். சி. உறுப்பினர் ரமேஷ் செல்லப்பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜ், ஒன்றியத் தலைவர் அரிய பாண்டி, மற்றும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!