அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!
X

வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மரக்கன்று நட்டு நிகழ்ச்சியினை தொடக்கி வைத்தார். 

வாடிப்பட்டி அருகே,ஜல்லிக்கட்டு மைதானத்தில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது.

வாடிப்பட்டி அருகே,ஜல்லிக்கட்டு மைதானத்தில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது.

வாடிப்பட்டி, அக்.22.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தனிச்சயம் பிர்கா கீழக்கரை கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சம் வயிற்றுமலை அடிவாரத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஜல்லிக்கட்டு மைதானத்தில் பருவமழை வருவதையொ ட்டி, சுற்றுச்சூழலையும், மேம்படுத் தும் விதத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மரக்கன்று நடவினை தொடக்கி வைத்தார். இதில், தாசில்தார் ராமச்சந்திரன், மண்டல துணைத் தாசில்தார் புவனேஷ்வரி,சுற்றுலாத்துறை அலுவலர்கள், மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஜல்லிக் கட்டு மைதானத்தில் சுற்றுப்புறங் களில் 500 மரக்கன்றுகள் நடவு செய்து மேலும், சுற்றுலாத்துறை மூலம் தொடர்ந்து நடவு செய்ய உள்ளனர்.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்துவதுடன்,இப்பகுதியின் சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் உதவும். மரங்கள் வளர்ந்து இப்பகுதியை அழகுபடுத்தும். ஜல்லிக்கட்டு நடக்கும் காலங்களில் பலர் மரத்தின் நிழலில் இளைப்பாறவும் உதவும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!