டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

தென்கரையில் ,டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் மரக்கன்றுகளை அப்துல் கலாம் அறிவியல் மன்றத்தினர் வழங்கினர்.

சோழவந்தான் அருகே தென்கரையில்டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழாவுக்கு அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கினர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ,தென்கரையில் கலை மாமணி டி ஆர் மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பில் டி ஆர் மகாலிங்கத்தின் பேரன் டி ஆர் எம் எஸ் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்கினார்.

அப்துல் கலாம் அறிவியல் மன்றத்தினர் திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது மக்களுக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கி கௌரவித்தார்கள். இதில் மன்னாடிமங்கலம் முள்ளி பள்ளம் ஏபிஜே அப்துல் கலாம் அறிவியல் மன்ற தலைவர் சரவணன், நிர்வாகிகள் பாலகுரு, ரவிச்சந்திரன், மெக்கானிக் ஆறுமுகம், முள்ளை,தவம், மதன், விக்கி, கார்த்திக், அஜித், ஆறுமுகம், சுபாஷ், சரவணன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினார்கள்.

டி.ஆர்.மகாலிங்கத்தின் நூற்றாண்டுவிழா அவரது பெருநாள் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பின்னணி பாடகி சுசீலா, நடிகர் நாசர், பூச்சி முருகன், வெண்ணிற ஆடை நிர்மலா போன்ற திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த விழாவில் அப்துல் காலம் அறிவியல் மன்றத்தினர் மரக்கன்றுகளை வழங்கினர்.

மரக்கன்றுகளை வழங்கியதுடன் டி.ஆர்.மகாலிங்கத்தின் நினைவிடத்தில் மரங்களை நட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story