சோழவந்தானில் பேரூராட்சிகள் துறை சார்பில் பயிற்சி முகாம்
மதுரை அருகே சோழவந்தானில் பேரூராட்சியில் சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசுகிறார் ,உதவி இயக்குனர் எஸ் சேதுராமன்.
சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள பி. ஜி. மஹாலில், மதுரை மண்டலம் பேரூராட்சி இயக்கம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளின் முக்கிய தூய்மை பணியாளர்கள் அடையாளம் காணுதல் தொடர்பான பயிற்சி நடந்தது. இப்பயிற்சியில், மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சி செயலாளர். ஜீலான்பானு, சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர், மாவட்ட அளவில் வருகை புரிந்த செயல் அலுவலர் சுகாதார மேற்பார்வையாளர் பரப்புரையாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் ஆகியோருக்கு தூய்மை பணியாளர்கள் மேம்பாடு திட்டம் குறித்து மற்றும் இதன் கணக்கெடுப்பு பற்றி எடுத்துக் கூறி பேசினார்கள்.
இந்த முகாமில், தூய்மை பணி குறித்தும் செயல்பாடு குறித்தும் எந்தெந்த வகையில் கையாள்வது பற்றியும் கழிவு நீர் பராமரிப்பு மலக்கசடு கழிவுநீர் சேகரிப்புத் தொட்டியை சுத்தம் செய்தல் பொது சமுதாயம் மற்றும் நிறுவன கழிப்பறைகளை சுத்தம் செய்தல் கழிவு நீர் மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையங்களில் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்தும் மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் ஆகிய செயல்பாடு குறித்து இந்த கணக்கெடுப்பு பயிற்சி முகாமில் விரிவாக எடுத்துக் கூறி பேசினார்கள்.
இதில், பேரூராட்சி மன்றத்தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் சத்திய பிரகாஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர் கண்ணம்மா வரவேற்றார்.பேரூராட்சி பணியாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
இந்த முகாமில், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரூராட்சிகளில் செயல் அலுவலர் சுகாதார மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஆகியோர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கணக்கெடுப்பு பயிற்சி முகாம் மிகவும் பயனளித்தாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu