Train Delay For Engine Trouble மதுரைக்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்ஜின்பழுது: 2 மணி நேரம் தாமதம்

Train Delay For Engine Trouble
சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் புயல் காரணமாக தாமதமாக புறப்பட்டு வந்த நிலையில் 5:30 மணிக்கு சோழவந்தான் வந்தடைந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால், பயணிகள் அவதியடைந்தனர். சென்னையில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் தற்போது, சென்னை வட்டாரத்தில் மழை பெய்வதால் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் சோழவந்தான் ரயில் நிலையத்திற்கு ஐந்து முப்பது மணி அளவில் வந்து சேர்ந்தது.அங்கிருந்து ரயில் புறப்பட முற்பட்டபோது ரயில் இன்ஜின் பழுதடைந்து நின்று விட்டது.
இதனால், மதுரையில் இருந்து மாற்று ரயில் இன்ஜின் வரவழைக்கப்பட்டு ஏழு முப்பது மணி அளவில் குருவாய் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது இதனால் சுமார் 2 மணி நேரம் பயணிகள் அவதிப்பட்டனர். ஏற்கனவே, புயல் காரணமாக ரயில்கள் தாமதமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்ஜின் பழுது காரணமாக 2 மணி நேரம் தாமதமாக சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu