சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா

மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த ஜெனகை மாரியம்மன்.
Today Temple News in Tamil - மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் கடைசி நாள் திருவிழாவான தீர்த்தவாரி திருவிழா நேற்று இரவு முழுவதும் நடைபெற்றது.
இதையொட்டி ,நேற்று மாலை 4 மணி அளவில் கோவில் மண்டபத்தில் திருவிழா கொடிஇறக்கம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மன் கோவிலில் இருந்து வெளியேறி பெரியகடை வீதி தெற்கு ரத வீதி மேல ரத வீதி உள்ளிட்ட 4 ரத வீதிகள் வழியாக வைகை ஆற்றுக்கு வந்தடைந்தது. அம்மன் ஊர்வலத்தின் போது, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது தொடர்ந்து, பெண்கள் முளைப்பாரி எடுத்தும் கோலாட்டம் ஆடியும் ஊர்வலமாக வந்தனர். அதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு 12 அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில், அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார். பின்னர், வைகையாற்றில் அமைக்கப்பட்டிருந்த. தீர்த்தவாரி மேடையில், அம்மன் பலவண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இரவு முழுவதும் ஊஞ்சல் ஆடியது. தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் விடிய விடிய அம்மனை சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, வைகை ஆற்றில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சார்பில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்னதான நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பேரூராட்சி தலைவர்கள் ஜெயராமன், பால்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கள் வசந்தகோகிலா, சரவணன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், முன்னாள் பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின், பேரூர் செயலாளர் முனியாண்டி, முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் மருதுபாண்டி, பேருர் நிர்வாகி சோழவந்தான் ஆர். ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ், முத்துச்செல்வி, சதீஷ்குமார், செந்தில்வேல், குருசாமி கோவில் செயல் அலுவலர் இளமதி, மற்றும் கோவில் பணியாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர்.கலந்து கொண்டனர்
பின்னர், மருது மஹாலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் எம்விஎம் குடும்பத்தினர் கலந்து கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர் . அவர்களுக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது . இதில், தொழிலதிபரும் சோழவந்தான் நகர் அரிமா சங்க தலைவருமான டாக்டர் மருதுபாண்டியன், பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் தொழிலதிபர் மணி முத்தையா, வள்ளி மயில் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தீர்த்தவாரி மண்டகப்படிதாரர், வாடிப்பட்டி பால்பாண்டி குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் , அதிகாலை தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்து அம்மன் பேட்டை கிராமத்திற்கு சென்று அங்கு மரியாதை செய்யப்பட்டது . பின்பு ஊர்வலமாக அம்மன் கோவிலை வந்தடைந்தது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu