திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கருத்தரங்கம்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கருத்தரங்கம்
X

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், கருத்தரங்கம்.

இந்திய பால் வணிக மாதிரி மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மாணவர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது

மதுரை, சோழவந்தான் திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், அகத்தர உறுதி மையமும் நிறுவன கண்டுபிடிப்பு மையமும் இணைந்து இந்திய பால் வணிக மாதிரி மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் என்ற தலைப்பில் மாணவர் மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்வு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார்.

செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் செ.பாலமுருகன், பொள்ளாச்சி குமுலோ நிம்பஸ் அக்ரோ டெய்ரி புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்,தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் இயக்குனர்

இந்திய பால் வணிக மாதிரி மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிறைவாக, முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் ஜெய்சங்கர் நன்றி உரை ஆற்றினார். இந்த நிகழ்வை நிறுவன கண்டுபிடிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் பவுன்ராஜ் தொகுத்து வழங்கினார்.விவேகானந்த கல்லூரி அனைத்து மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!