திருவேடகம் ஏடகநாத சுவாமி ஆலயத்தில் ஏடு எதிரேறிய திருவிழா

திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயத்தில் நடந்த ஏடு எதிரேறிய திருவிழா.
சோழவந்தான் திருவேடகம் ஏலவார் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார் குழலி அம்மன் சமேத ஏடகநாதர்சுவாமி கோவில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி அன்று ஏடு எதிரேறியதிருவிழா நடைபெறும்.
7ம் நூற்றாண்டில் சங்க தமிழ் வளர்த்த மதுரையில் சமண சமயத்தவர்கள் ஆதிக்கம் செலுத்த அந்த சமணர்கள் வசம் அப்போது மதுரை ஆண்ட கூன்பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாற பாண்டியனும் அந்த சமயத்தினை பின்பற்ற சைவ சமயம் மீண்டும் தலைத்தோங்கு வதற்கும் தமிழ்நெறி வளரவும் பாண்டியனின் மனைவியான மங்கையற்கரசியார் எனும் தீவிர சிவ பக்தை சீர்காழியில் இருந்து தெய்வ குழந்தையான திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் மனதை மாற்றியும் வெப்பு நோயை தீர்த்து வைத்தார்.
சமணர்களை அனல் வாதத்தில் வென்று புனல் வாதத்தில் திருப்பாசுர ஏட்டினை வைகை ஆற்றில் விட்டு அது வைகை ஆற்றினை எதிர்த்து வந்து வெற்றி பெற்ற இடமான திருஏடகத்தில் அந்த வைபவத்தை நினைவூட்டும் வகையில் நேற்று ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது .
இந்த திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் இருந்து நேற்று மாலை விநாகர் முன்வர திருஞான சம்பந்தருடன் நின்றசீர் நெடுமாற பாண்டியனின் தலைமை அமைச்சரான குலச்சிரை நாயனாருடன் வந்து ஞானசம்பந்தர் திருப்பாசுர ஏடினை எடுத்து செல்லும் வைபவமானது நேற்று மாலை நடந்தது.
கேடயத்தில் விநாயகர் குதிரை வாகனத்தில் ஏடகநாதர் மற்றும் கேடயத்தில் திருஞானசம்பந்தர் இவருடன் வைகைஆற்று வாழ்க அந்தணர் என்ற வாசகம் குறித்த கரையில் உள்ள திருஞான சம்பந்தர் செப்பு தகட்டில் உள்ள ஏடு சந்நிதியிலிருந்து வாழ்க அந்தணர் என்ற செப்பு தகட்டில் ஆன ஏடு அலங்காரமாகி வைகையாற்றில் படித்துறைக்கு வந்து சேர்ந்தது. இங்கு ஓதுவார் ஸ்தலத்திலேயே வரலாறும்,ஏடு எதிரேறிய வரலாறும் பக்தி பாடலுடன் எடுத்துக்கூறினர்.
பின்னர் வறண்ட வைகை ஆற்றில் பள்ளம் தோண்டப்பட்டு தார்ப்பாய் விரிக்கப்பட்டு இதில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இந்த தண்ணீரில் ஏடு எதிர்கொள்வது போல் காட்சி நடைபெற்றது. பின்னர், பூஜைகள் நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் செயல் அலுவலர் சரவணன் ,பரம்பரை அறங்காவலர் சேவுகன்செட்டியார், கோவில் பணியாளர்கள் மற்றும் பிரதோஷம் கமிட்டியினர், சிவனடியார் பக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu