திருவேடகம் விவேகானந்தா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருவேடகம் விவேகானந்தா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
X

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் 1985-88 ஆண்டு, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின், 1985-88 ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியின், 1985-88 ஆண்டு, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை, முன்னாள் மாணவர்கள் சோமசுந்தரம் மற்றும் நாகராஜன் முறைப்படி முன்னின்று ஒருங்கிணைப்பாளர்களாக செயல் வடிவம் கொடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், தங்கள் குடும்பத்துடன் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கப்பட்டது. முன்னாள் மாணவர் ஸ்ரீ சாய் சங்கர சுப்பிரமணியன் இறைவணக்கம் பாடினார். முன்னாள் மாணவர் முனைவர் தீனதயாளன் வரவேற்புரை ஆற்றினார். விவேகானந்த கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொருளாளர் மற்றும் பொருளியல் துறை தலைவர் பட்டினத்தார் வாழ்த்துரை வழங்கினார். மேனாள் ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் வெங்கடசுப்பு வாழ்த்துரை வழங்கினார்.

விவேகானந்த கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த, துணை முதல்வர் பார்த்தசாரதி, அகத் தர மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் சோமசுந்தரம் காசோலையாக ரூபாய் 10000 நன்கொடை நிதியாக கல்லூரிக்கு வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பேராசிரியர்கள் முனைவர். வடிவேல்ராஜா, முனைவர். அருள்மாறன், முனைவர். திருப்பதி, கார்த்திகேயன், முனைவர். சௌந்தர்ராஜ் மற்றும் முனைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னின்று கவனித்துக் கொண்டனர். ஆசிரியரல்லாத பணியாளர்கள் வீரணன், சோமசுந்தரம், அறிவமுது, குணசீலன் ஆகியோர் முன்னின்று கவனித்துக் கொண்டனர். 1985-88 ஆண்டில் படித்த பழைய மாணவர்கள் கல்லூரியின் செயல்பாடு குறித்தும் வளர்ச்சி குறித்தும் பல கருத்துக்களை தெரிவித்தனர். முன்னாள் மாணவர் கணேசன் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை முன்னாள் மாணவர் செந்தில்குமார் தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil