சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான் ஜெனகை  நாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
X

சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாண வைபவம்

ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகர் தவம் இருந்த பெருமை வாய்ந்த தலம் ஆகும்

சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி.ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். மாப்பிள்ளை பெண் அழைப்பு தொடர்ந்து ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது.

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜெனக நாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் ராமர் சீதா கல்யாணம் நடந்தது. இதில் சோழவந்தான் பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மொய் எழுதி, உணவருந்தி சென்றனர். திருக்கல்யாண ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுதா, தக்கார் அங்கையற்கன்னி, கணக்கர் முரளிதரன் ஆகியோர் செய்து இருந்தனர். இக் கோயிலில், பங்குனி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. தினசரி மாலை நேரங்களில் பெருமாள் வாகனத்தில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு ஜெனகை நாராயண பெருமாள் திருக்கோயில் ஆகும். மூலவர்- நாராயணன் தேவியர்- ஸ்ரீதேவிபூதேவி தாயார்- ஜெனகைவல்லி தனிசந்நிதி- ஆண்டாள் சிறப்பு- ஜெயவீர ஆஞ்சநேயர் ஆகமம்- பாஞ்சராத்ர சம்பிரதாயம்- தென்கலை புராண பெயர்- ஜனகையம்பதி.

ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகர் தவம் இருந்த பெருமை வாய்ந்த தலம் ஆகும். திருக்கோயிலின் அர்த்தமண்டபத்தின் வலது புறம் தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார். ஸ்ரீமன் நாராயணனே மாப்பிள்ளையாக வேண்டி ஜனகர் தவம் இருந்த தலம் ஆகும்.பெரிய அளவிலான இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரது வார்ப்பு விக்கிரகங்கள் அமையப் பெற்றுள்ளது.

இத்தலத்திலுள்ள ஜெயவீர ஆஞ்சநேயரை வடைமாலை சாற்றி வணங்கி விட்டு எந்த காரியத்தை தொட்டாலும் அந்த காரியம் எந்தவித இடையூறும் இல்லாமல் வெற்றியடைகிறது என்பதால் ஜெயவீர ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்றுள்ளார். ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் மணி கட்டியிருக்கும்.புராண காலத்தில் இருந்து புகழ் பெற்ற கோயில் இதுவாகும்.

ஜனகரின் மகள் சீதையாக மகாலட்சுமியே பிறந்து பெருமை சேர்த்தாள்.மகரிஷியான ஜனகருக்கு தம்மிடம் வளரும் குழந்தை யார் என்று உணர முடிந்தது. மகாலட்சுமியை யாருக்கு மணம் முடிப்பது என்று பெரிய குழப்பமாக இருந்தது. இதற்காக ஸ்ரீமன் நாராயணனே பிறப்பெடுத்து வந்தால் தன் பாரம் நீங்கும் என்று எண்ணி சோழவந்தானில் வந்து தவமிருந்தார்.

இந்த நிகழ்வே இத்திருக்கோயிலுக்கு ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் என பெயர் வர காரணமாக அமைந்தது. இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில், பங்குனி பிரமோத்ஸவ திருவிழா நடைபெறுகிறது. இந்த சமயத்தில் நடைபெறும் திருக்கல்யாணம் சிறப்பு வாய்ந்ததாகும்.சோழவந்தான் நகரின் மையப்பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


Tags

Next Story