மதுரை அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்களால் பரபரப்பு

மதுரை அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த மக்கள்.
மதுரை வாடிப்பட்டி அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மே தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் அந்தந்த ஊராட்சிகள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. சில மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் இந்த கூட்டங்களில் பங்கேற்றும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் செமினிப்பட்டி ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் தனியார் அட்டை கம்பெனிக்கு அனுமதி அளித்த ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு முன்பு நடைபெற்ற ஐந்து கிராம சபை கூட்டங்களிலும் தனியார் தொழிற்சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றாததால் கிராம சபை கூட்டம் நடத்தி எந்த பயனும் இல்லை என்றும், ஆகையால், கிராம சபை கூட்டம் எங்கள் ஊராட்சிக்கு தேவை இல்லை என்றும் கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்து கிராமசபை கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஏற்கனவே இது குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் பல போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லாததால் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் ,இதுகுறித்து முறையாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மீண்டும் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu