தெப்பத்துப்பட்டி அருள்மிகு பொக்கிஷ விஸ்வநாதர் ஆலய குடமுழுக்கு

தெப்பத்துப்பட்டி அருள்மிகு பொக்கிஷ விஸ்வநாதர் ஆலய குடமுழுக்கு
X

தெப்பத்துப்பட்டி அருள்மிகு பொக்கிஷ விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் தெப்பத்துப்பட்டி அருள்மிகு பொக்கிஷ விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம் விழாவைமுன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நேற்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின இன்று காலை யாகசாலையில் இருந்து குடங்கள் எடுக்கப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் சுமார் காலை 9 மணி அளவில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது, கருடன் வானத்தில் வட்டமிட்டது தொடர்ந்து ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சேர்வை மா அடைக்கலம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் சுகாதார ஏற்பாடுகளும் விக்கிரமங்கலம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!